Posted by : gatherpage Monday, July 24, 2023

மிளகாயில் அடங்கியுள்ள காப்ஸேஸின் (Capsaicin) எனும் இரசாயனப் பதார்த்தமே அதன் உறைப்புத் தன்மைக்குக் காரணமாகும். இப்பதார்த்தம் மிளகாயின் மேல் தோலுக்கும் விதை உற்பத்தியாகும் நடுப்பகுதிக்குமிடையே உள்ள மெல்லிய படலத்தில் பொதிந்துள்ளது.

நாம் மிளகாயைக் கடிக்கும் போது நாக்கின் சுவை அரும்புகளில் குறித்த இரசாயனப்பதார்த்தம்  ஏற்படுத்தும் எரிவே எமக்கு உறைப்பாக நாக்கிலுள்ள நரம்பு முடிவிடங்களால் உணரப்படுகிறது. சிலவகை மிளகாய்களில் இக்குறித்த இரசாயனப் பதார்த்தம் அடங்கியிராமையினால் அவற்றில் உறைப்புத்தன்மை காணப்படமாட்டாது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger