Posted by : gatherpage Monday, July 27, 2015

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பிமாண்டமான திரைப்படம் "பாகுபலி" அத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 303 கோடி ரூபா இந்தியப் பணத்தை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவான இப்படம், தென்னிந்திய சினிமாவிலேயே 300 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் செயற்படும் குளோபல் ஐக்கிய ஊடாக நிறுவனம் பாகுபலி படத்தின் மிகப்பெரிய சுவரொட்டியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த போஸ்டர் 4793.65 சதுரமீற்றர் பரப்பளவில் (51598.21 சதுர அடி) உள்ளது. படத்தின் இயக்குனர் ராஜமௌலி இந்த சாதனையை படைத்த நிறுவனத்திற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger