- Back to Home »
- வானியல் »
- ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட அரிய நட்சத்திர முறைமை கண்டுபிடிப்பு
Posted by : gatherpage
Tuesday, July 21, 2015
ஐந்து நட்சத்திரங்களை உள்ளடக்கிய அரிய நட்சத்திர முறைமையொன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக காணப்படும் இரு சோடி நட்சத்திரங்களையும், தனித்துக் காணப்படும் நட்சத்திரமமொன்றையும் இந்த நட்சத்திர முறைமை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய நட்சத்திரமுறைமை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மேற்படி நட்சத்திர முறைமையானது "உர்ஸா மேஜர்" என அழைக்கப்படும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ளது.
அவற்றில் இரு நட்சத்திர சோடிகளும் மைய ஈர்ப்பு விசையொன்றை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. எனினும் அவற்றுக்கு இடையேயான தூரம் சூரியனிலிருந்து புளுட்டோ அமைந்துள்ள தூரத்தை விடவும் அதிகமாகும். இந்த நட்சத்திர முறைமையின் கண்டுபிடிப்பானது வேல்ஸில் இடம்பெற்ற பிரித்தானியா தேசிய விண்ணியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

