- Back to Home »
- உலக விடயங்கள் »
- உலகின் பழமையான குர்ஆன் பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு
Posted by : gatherpage
Monday, July 27, 2015
உலகின் பழமையான குர்ஆனின் சிதைவுகள் பிரித்தானிய பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த சிதைவுகளில் காணப்பட்ட ரேடியோ காபன் துணிக்கைகளானது 1370 ஆண்டுகள் பழமைமிக்கதாகும். மேற்படி சிதைவுகளிலுள்ள புனித வசனங்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரேடியோ காபன் ஆய்வுப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே அது ஆட்டின் தோலில் எழுதப்பட்ட உலகின் பழமையான குர்ஆன்களில் ஒன்றென்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் பரவசமூட்டும் கண்டுபிடிப்பாக உள்ளதாக பிரித்தானிய நூலக நிபுணர் கலாநிதி மொஹமட் இஸா வலி தெரிவித்தார்.

