Posted by : gatherpage Thursday, July 23, 2015

இது இந்து சமயத்தினரால்  ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுக்கையில் நடைபெறும். திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை ஆறுகளும், கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் இடமாகும். இந்த 3 ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் நடைபெறுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். கும்பமேளா முழு(பூரண) கும்பமேளா எனப்படும்.

வேத நம்பிக்கைகளின்படி சாகாவரம் தரக்கூடிய அமிர்தம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற பானையிலிருந்து(கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகின்றார்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger