Posted by : gatherpage Tuesday, July 14, 2015

புவியின் சுற்றுவட்டப் பாதையை சுமார் 5 இலட்சம் செயலிழந்த பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
மணிக்கு சுமார் 28,200 Km வேகத்தில் அவை சுற்றிக் கொண்டிருப்பதனால் பிற செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளதுடன் பூமிக்கும் சேதம் ஏற்படும்.
இந்தப் பொருட்களை சேகரித்து பூமிக்குதிரும்பக் கொண்டுவரும் முயற்சியில் "நாசா" விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விண்வெளியில் சுற்றிவரும் பொருட்களை தனியாக பிரித்து பூமிக்கு கொண்டுவரும் முயறசியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுவிஸ் பெடரல் லஸ்சானே தொழில்நுட்ப நிறுவனம் என்ற ஆய்வுகூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும், ஹெபியா ஜெனீவாவைச் சேர்ந்த  நுண்ணிய பொறியியல்துறை மாணவர்களும் சேர்ந்து "பேக்மேன் நெட்" என்ற செயற்கைக்கோள் கருவியை உருவாக்கி வருகின்றனர்.
இக்கருவி விண்ணில் செலுத்தப்பட்டவுடன் பூமியின் வட்டப்பாதையில் சுற்றிவரும் செயலிழந்த செயற்கை கோள்கள், உடைந்து தனியாக சுற்றிவரும் உதிரிப்பாகங்கள் உள்ளானவற்றை கவர்ந்து இழுத்து பூமிக்கு கொண:வர உதவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger