- Back to Home »
- உலக விடயங்கள் »
- மிகப் பெரிய ஆகாயக்கப்பல்
Posted by : gatherpage
Sunday, July 12, 2015
ஒரே சமயத்தில் 200 படைவீரர்களைக் காவிச் செல்லும் ஆகாயக்கப்பல் ரஷ்யாவில் அறிமுகமாகின்றது. இது ஓடுபாதை அவசியமற்ற இராணுவ ஆகாயக்கப்பல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு "அட்லாண்ட்" என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் இதன் நீளம் 130m ஆகும். இதில் 200 இராணுவ வீரர்களுடன் 60 தொன் சரக்கையும் ஏற்றி 86 மைல் வேகத்துடன் பயணிக்கக் கூடியது.
அத்துடன் இந்த ஆகாயக் கப்பில் சிறிய ரக ஆகாயக்கப்பல் 16 தொன் நிறையுடைய சரக்குடன் மணிக்கு 105 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். மேலும் இக்கப்பல் 400 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் விமானத்தை போன்று பயணத்தை மேற்கொள்ள உதவும் இந்தவகை ஆகாயக் கப்பல்களை "அயுகுர் ரோஸ்ஏர்கோ சிஸ்டம்ஸ்" நிறுவணம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடிவமைத்து வருகிறது.
இவ்வகை ஆகாயக்கப்பல் எதிர்வரும் 2018 இல் வெள்ளோட்டம் விடப்படும் எனத் தெரிகிறது.