Posted by : gatherpage Monday, February 23, 2026


விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில்இ அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. முன்னைய காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்பட;ட  விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ மற்றும் குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது தொர்பாக ஆராய்வோம்.

விஷப்பூச்சி கொட்டினால் செய்யக்கூடாதவை

விஷப்பூச்சி கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


அபாய அறிகுறிகள்

மூச்சுத்திணறல் 

முகம்இ உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்

கடும் தலைச்சுற்றல், மயக்கம்

தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு

இதயத் துடிப்பு அதிகரித்தல்

உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்

கடும் அலர்ஜி


விஷப்பூச்சி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்

தேனீயோ அல்லது குளவியோ கொட்டினால் முதலில் பதற்றம் கொள்ளாமல் கொட்டிய இடத்தில் இருக்கும் அந்த கொடுக்கை ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் வைத்து அழுத்தி தேய்த்து அகற்றவும். விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கையை வைத்து அழுத்தவோ, கொடுக்கை பிடுங்கவோ கூடாது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger