- Back to Home »
- உலக விடயங்கள் »
- இயற்பியலில் சிகரம் தொட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
Posted by : gatherpage
Thursday, March 15, 2018
இயற்பியலை விளக்குவது கடினம் எனினும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளக்கிய பெருமைக்குரியவரும், கருந்துளை கோட்பாடு, பெருவெடிப்பு கோட்பாடு அண்டவியல் ஆராய்ச்சி போன்ற அனைத்து முக்கிய ஆராய்ச்சிகளிலும் இவரது பங்கு மகத்தானது என்ற பெருமைக்குரியவருமான இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 76 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். “கருந்துளை மற்றும் சார்பியல்”தொடர்பான இயற்பியல் அறிவியலுக்கு புகழ் பெற்றவர். தனது இளவயதிவேயே மூளை மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் அரியநோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவோ, தடையாகவோ கருதாமல் இயற்பியலில் சிகரம் தொட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
இவரது பிறப்பும் (08.01.1942 இல் இங்கிலாந்தில் பிறந்தவர்) இறப்பும் (14.03.2018) அறிவியலில் இருந்து பிரிக்க முடியாதவாறு விளங்கும் என்பதற்கு பல அறிவியலாளர்கள் கூறும் கருத்து“கலிலியோ இறந்த நாளில் பிறந்து ஐன்ஸ்டீன் பிறந்தநாளில் இறந்திருக்கின்றார்” என்பதாகும்.
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன் வார்த்தைகளில் வெற்றி என்பது வாழும் கடினமான வாழ்க்கையில் தான் உள்ளது. நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பவற்றினைக் குறிப்பிடலாம்.
“The theory of Everything” எனும் பெயரில் அவரது வாழ்க்கை ஆங்கில திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர் 2009 இல் பராக் ஒபாமாஅதிபராக இருந்தபோது அமெரிக்காவின் கௌரவம் மிக்க“பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்” பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார் அதில் A Brief History of Time என்ற புத்தகம் பிரபல்யமானது. இப்புத்தகம் 10 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றது. கருந்துளை சுருங்குகின்றது என்ற கோட்பாட்டை முன்வைத்தவர். தனது ஆராய்ச்சிகள் மூலம் இயற்பியல் துறைக்கும், நவீன அறிவியலுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி இவர். ஏதிர்காலத்தில் வளர்ந்துவரும் விஞ்ஞானிகளுக்கு இவரது கோட்பாடுகள் பெரிதும் உறுதுணையாகவும், இவரது வாழ்க்கை அனுபவம் உந்துசக்தியாகவும் விளங்கும் என்பதில் ஜயமில்லை.

