- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் - 2018 கோலாகலமாக நிறைவு
Posted by : gatherpage
Monday, March 5, 2018
2018 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று கோலாகலமாக நிறைவடைந்துள்ளன. இதில் 93 நாடுகள் பங்குபற்றியிருந்தன. ஓலிம்பிக்போட்டியின் போது ரஷ்யபவைச் சேர்ந்த வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டின் ஒலிம்பிக்கமிட்டிக்கு சர்வதேச ஒலிம்பிக்கமிட்டி தடைவிதித்தது. இதனால் ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.
முதல் முதலாக பங்குபற்றிய நாடுகள் : ஈக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர்
15 வகையான விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டன.
இந்த ஒலிம்பிக்போட்டியில் ரஷ்ய கீதம் முதல் முறையாக இசைக்கப்பட்டது.
போட்டியின் நிறைவில் முதல் நிலையினை நோர்வேயும், இரண்டாம் நிலையினை ஜேர்மனியும், மூன்றாம் நிலையினை கனடாவும் பெற்றன.


