Posted by : gatherpage Monday, March 5, 2018

2000 ஆம் ஆண்டு நாஸாவானது இமேஜ் என்ற செய்மதியை விண்ணில் அனுப்பியது. அதற்கேற்ப இமேஜ் விண்ணில் நிலைகொண்டு, விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு காந்தக்கடலை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்தது. இவ்வாறிருக்கையில் 2005 ஆம் ஆண்டு இமேஜீக்கும் நாஸாவுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.இந்நிலையில் இவ்வருடம் தனியார் விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று “ஸீமா” என்ற ஒரு செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது. எனினும் அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் அதுவும் காணாமல் போனது.“ஸீமா” விற்கு என்ன நடந்தது என அறிய “ஸ்கொட் டில்லி” என்ற கனேடிய ஆரம்பநிலை ஆய்வாளர் ஒருவர் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அதன்போது இமேஜ் தொடர்பான நாஸாவின் அறிக்கையை அவர் காண நேர்ந்தது.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த தரவுகளும் தான் கண்டுபிடித்த தரவுகளும் ஒன்றோடொன்று ஒத்ததாக இருப்பதைக்கண்டு தனது ஆய்வறிக்கையை நாஸாவுக்கு அனுப்பிவைத்தார். நாஸா ஆனது இவ் ஆய்வறிக்கையினை ஆராய்ந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்குப்பின்னர் அது இமேஜின் சமிக்ஞைகள் தான்  என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger