- Back to Home »
- உலக விடயங்கள் »
- வெள்ளை மாளிகை
Posted by : gatherpage
Wednesday, October 2, 2013
வாஷிங்டனிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெள்ளை மாளிகை என்று பெயர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான வாஷிங்டன் காலத்தில் கட்டும் வேலை தொடங்கியது. ஆனால் அவரது வாழ்நாளில் முடியவில்லை. இம்மாளிகையில் விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்கு ஒரு நிலஅறை உள்ளது. பல நாடகள் அங்கேயே இருக்க எல்லா வசதிகளும் கொண்டது.
அறைச்சுவரின் கனம் ஒன்பது அடி இரட்டை வரிசை உருக்குக் கதவுகள் கொண்டது. அப்போது ஒன்பது இலட்சம் டொலர் செலவில் கட்டப்பட்டது. இதன் உள்ளமைப்பில் காணப்படும் முக்கிய விடயங்கள் சில அதிகாரிகளைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. இம்மாளிகை 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

